நாம் பார்க்கும் இணைய தளம் பாதுகாப்பானதா என அறிய










பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.



இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.
இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம். சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
 இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன. 
1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன்.
2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி. 
3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு. 
4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.

9 comments:

  1. தகவலுக்கு நன்றி தலைவரே... புக்மார்க் செய்து கொள்கிறேன்...

    ReplyDelete
  2. உபயோகமான பதிவு .பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. எமது இணையத் தளப் பாதுகாப்பினைப் பரிசோதித்துக் கொள்ளுவதற்கேற்ற கலக்கலான விளக்கப் பகிர்வு.
    நன்றி பாஸ்.

    ReplyDelete
  4. Timely information and thanks a lot

    ReplyDelete
  5. வலை வந்து கருத்துரை வழங்
    கினிர் நன்றி
    கடுமையான முதுகுவலி
    காரணமாக அமர்ந்து கருத்துரை
    வழங்க இயலவில்லை மன்னிக்க!

    பின்னர் எழுதுகிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. புலவர் சா இராமாநுசம் @ ஐயா தங்களது வருகைக்கு நன்றி .தாங்கள் இந்த வயதிலும் வலை பூ மூலம் தமிழுக்கு தொண்டாற்றி வருகிறிர்கள் எனது வாழ்த்துகள். தங்கள் கருத்துரையை விட தங்களது உடல் ஆரோகியம் அவசியம். தங்களது ஆதரவுக்கு நன்றி புலவரே

    ReplyDelete
  7. Philosophy Prabhakaran @ தங்களது வருகைக்கு நன்றி . தங்களது ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  8. நண்டு @நொரண்டு -ஈரோடு ,என் ராஜபாட்டை- ராஜா,நிரூபன் ,Unknown @@@உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  9. மன்னிக்க வேண்டும் சகோ இத்தனை நாளும் உங்கள் தளத்தினைப் பின்தொடரத் தவறிவிட்டேன் .இன்றைய
    பகிர்வு அருமை!....மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

    ReplyDelete